- தோட்டத்தில் பறித்த 90 மாங்காய்களை மூன்று மூட்டையாக கட்டி வீட்டிற்கு எடுத்து வருகிறேன். வரும் வழியில் 30 சுங்க சாவடிகள் ஒவ்வொரு சுங்க சாவடிக்கும் மூட்டைக்கு ஒரு மாங்காய் வீதம் தர வேண்டும் எனில் வீட்டிற்கு எத்தனை மாங்காய் எடுத்துச் சென்றிருப்பேன்
- ஒர் இருபது அடி ஆழ கிணற்றுக்குள் ஒரு தவளை விழுந்து விட்டது அது ஒரு முறை மேல் நோக்கி தாவும் போதும் 4 அடிகள் மேலே எறி மூன்று அடிகள் சருக்குகிறது எனில் எத்தனை யாவது முறை தாவும் போது அது கிணற்றை விட்டு மேல வரும்
- ஒரு நீளமான மரத்தில் இருந்து ஒரு துண்டு கட்டை வெட்டிட 1 மணி நேரம் எனில் அம்மரத்தை 10 துண்டுகளாக வெட்டிட எத்தனை மணி நேரம் ஆகும்
- ஒரு நாளைக்கு நான் வேலைக்கு சென்றால் எனக்கு கூலி ரு 10 அதே சமயம் நான் வேலை செல்லவில்லை எனில் ரூ 5 பிடித்து கொள்வார்கள். 30 நாட்கள் கொண்ட மாதத்தில் எனக்கு ரூ 240 கூலி தருகிறார்கள் எனில் நான் எத்தனை நாட்கள் விடுப்பு எடுத்து இருப்பேன்
- ஒரு பாட்டி விற்று சென்ற கொய்யா பழங்களை திருடர்கள் பரித்து சென்று விட்டனர். அப்பாட்டி அந்நாட்டு மன்னரிடம் முறையிட்டால் மன்னரோ எனது ஆட்சியில் இத்தவருக்கு நானே பொறுப்பு ஏற்று தங்களுக்கு உண்டான தொகை தருகிறேன் , தாங்கள் எத்தனை கொய்யாபழம் கொண்டு வந்தீர்கள் அதன் விலை என்ன என மன்னர் கேட்டார் அதற்கு அந்த பாட்டி நான் எத்தனை கொண்டு வந்தேன் என்று எனக்கு தெரியா ஆனால் அதனை
மூன்று மூன்றாக பிரித்தால் நான்கு வரும்
நான்கு நான்காய் பிரித்தால் ஜந்து வரும்
ஐந்து ஐந்தாக பிரித்தால் ஆறு வரும்
ஆறு ஆறாக பிரித்தால் எழூ வரும்
ஏழு ஏழாக பிரித்தால் சமமாக வரும்
எனக்கூறினாள் எனில் அப்பாட்டி கொண்டு வந்த கொய்யா பழத்தின்
எண்ணிக்கை என்ன?
- உ
- உ
- உ