Saturday, 16 April 2022

வாழ்வியல்

வாழ்வியல் முறை என்பது நாம் மட்டும் தனித்து வாழ்வது அல்ல, எல்லோரும் போற்றிட சிறப்பாக வாழ்வதும் அல்ல வாழையடி வாழையாய் வையம் போற்றிட வம்சம் தழைத்திட சந்ததிகளும் சந்தோசமாய் வாழ்ந்திட தக்கபடி வாழ்வதே ஆகும்

இதுவரை நாட்காட்டி செல்லும் 2020 ஆண்டுகள் மட்டுமல்ல அதற்கும் மேற்பட்ட காலங்காலமாய்  மனித சமுதாயம் மாண்போடு நிலைத்து வாழ்வதற்கு தற்சார்புடைய சமுதாய வாழ்க்கை முறையே காரணமாகும்.

தன்னந்தனியாய் சுற்றித்திரியும் மிருகங்களும் பறவைகளும் கூட தன்னுடைய சந்ததிக்கு என்றே அனைத்தையும் உருவாக்குகின்றன
இன்றைய அறிவியலின் வளர்ச்சி எவ்வளவு பெரிதாக இருப்பினும் இவை யாவுமே முன்னோர்கள் பயன்படுத்தியவையே . இன்றுள்ள எந்த ஒரு புதிய தொழில்நுட்பமும் புதிதாக வந்தது அல்ல அவை யாவும் முழுக்க முழுக்க பழமையானது இன்னும் சொல்லப்போனால் பழங்காலத்தில் பயன்படுத்திய வகையை காட்டிலும் தரம் குறைந்த வையே இதனை உலகம் முழுக்க உள்ள அனைத்து ஆய்வாளர்களும் தெளிவாக உணர்த்துகின்றனர்.

மின்சாரம் முதல் கொண்டு ஆகாய விமானம் செயற்கைக்கோள் மாடமாளிகைகள் புதிய தொழில்நுட்பங்கள் என எது  தோன்றினும் அது பழையவற்றை பிரதிபலிப்பே இதனை நான் தனியாக நிறுவ வேண்டும் என்ற வேண்டுமென்ற எந்த ஒரு நிர்பந்தமும் கிடையாது இவை யாவரும் அறிந்த உண்மைகளே.
அகத்தியர் காலத்திலேயே மின்கலன்கள் உற்பத்தி செய்யப்பட்டுவிட்டன என்பதும் ராவணன் காலத்திலேயே ஆகாய விமானங்கள் அற்புதமாக பறந்தன என்றும் நமக்கு கூறிய கதைகள் எதுவும் பொய்யல்ல  யாவும் உண்மையே .

அப்புறம் ஏன் ' மக்கள் இன்றைய அளவிற்கு பெரிய அளவில் அறிவியல் தொழில்நுட்பங்களை கொண்டு முன்னேறாமல் தற்குறி ஆகவே வாழ்ந்தனர்' என்கின்றீர்களா அவர்கள் தற்குறி ஆக வாழவில்லை இயற்கையோடு இயைந்து வாழ்ந்தனர். பறவைகளோடு பறந்தனர், மிருகங்களோடு கலந்தனர், மீன்களோடு நீந்தினார் எதுவுமே சாத்தியம் என்பதை அவர்கள் உணர்ந்திருந்தனர்.


இன்றைய வாழ்க்கையை போல் அவர்கள் எதிலும் ஆதாயம் தேட வில்லை, ஆசைகளை தூண்டவில்லை சந்தோசமாக சமுதாயமாக வாழ்ந்தனர். ஒருவருக்கொருவர் தொடர்புபடுத்தி ஒரு கூட்டு சமுதாயத்தை அமைத்திருந்தனர். ஒவ்வொருத்தரிடமும் ஒவ்வொரு அத்தியாவசிய தேவைகளை கொடுத்து அதில் அவர்களை உச்சம் தொட வைத்தனர், வித்தைகளை காட்ட வைத்தனர். 
சமுதாயத்தில் ஏற்றத்தாழ்வுகள் இன்றி சந்தோசமாக வாழ்ந்தனர்.

அனைத்தும் அனைவருக்கும் பொதுவாக இருந்த காலத்திலும் அறிவியலை மட்டும் ரகசியமாகவே பாதுகாத்து வந்தனர் 
என்ன செய்வது காலத்தின் கட்டாயம் ஏலக்காய் வாங்க வந்தேன் என்று ஏதேதோ கூறி இங்கிருந்த ஏடுகளை எல்லாம் எடுத்துச்சென்ற வெள்ளையன் எல்லோரையும் அடிமை செய்ய அவற்றை பயன்படுத்திக் கொண்டுள்ளான்.
எவ்வுயிரும் தம்முயிர் போல் எண்ணி வாழ்ந்திட்ட மண்ணுலகை மனிதனுக்கு மட்டுமே என்று தனி ஒரு ஆளாக மாற முடிவு செய்துவிட்டான்

எது எதையெல்லாம் யாவருக்கும் பொதுவாக இருந்ததோ அதை எல்லாம் தனி உடைமை ஆகிவிட்டான் . எது தேவையோ அதனை பிடுங்கிக் கொண்டு தேவையில்லாத அனைத்தையும் பொதுவுடமை ஆக்கி வைத்துள்ளான்

இவற்றை சிறிதேனும் உணராது சிந்திக்கத் தெரியாது சிறப்பு சிறப்பு என்று சிறப்பாய் உருவாக்கி கொண்டு உள்ளோம் மனித குலத்திற்கான கல்லறைகளை.

நாடோடியாய் இருந்தபோதுகூட கூட்டுக்குடும்பமாக இருந்தவன் இன்று தனியாய் நாடுகளுக்கிடையே ஒடிக் கொண்டுள்ளான்.

ஆல்போல் தழைத்து அருகுபோல் வேறன்றி வாழையடி வாழையாய் வாழவேண்டுமெனற வாழ்வியலை மறந்து எதையோ தேடி எங்கு ஓடிக்கொண்டிருந்தான எதை தேடுகிறான் எங்கு தேடுகிறான் என்பதை அறியாது தேடுகிறாள்.

உள்ளூரில் ஓணான் பிடிக்க தயங்கியவன் வெளியூரில் உடும்பு பிடித்துக் கொண்டுள்ளான்

ஆம் வாழையடி வாழையாய் தனக்கென்று ஒரு தொழில் வைத்து நம் சந்ததிகளுக்கு அதை கற்றுக் கொடுத்து தாய் எட்டடி பாய்ந்தால் குட்டி பதினாறு அடி பாயும் என அதில் எண்ணற்ற புதுமைகளையும் சிந்தனைகளையும் செலுத்தி அனைத்தையும் சிறக்கச் செய்தனர் ஆனால் ஆனால் இன்று அப்பன் தொழிலை எக்காரணம் கொண்டும் மகன் செய்யக்கூடாது என்ற மறைமுக சட்டதிட்டம் , மனதுக்குள் எழுந்த உணர்வாய் மாற்றிவிட்டனர். ஒவ்வொரு தலைமுறையும் தனக்கென புதிய வேலை புதிய வேலை என வேலை தேடுவதிலேயே இருக்கின்றன

படிப்புக்கும் தொழிலுக்கும் சம்பந்தமில்லை என்ற உண்மையை உணர்ந்து இருந்தபோதிலும் தொழிலைத் தாண்டி உத்தியோகம் என்று அலைகின்றனர் நிலையான வருமானம் நிலையான வருவாய் என்ற ஆவல் தொழில் என்பது நமது பரம்பரைக்கே நிலையானது என்பதை மறந்து  உத்தியோகம் என்பதே நிலைத்தது என்று அலைகின்றனர்.

தமிழில் ஒவ்வொரு எழுத்தும் ஒவ்வொரு காரண காரியத்துக்காக அமைந்துள்ளது என்பது அனைவருமே அறிவோம் தொ என்ற எழுத்து தொன்று தொட்டு என்ற பழமையை குறிக்கும். அதாவது காலங்காலமாய் ,வழிவழியாய் பொருளில் வருவது எடுத்துக்காட்டாய் தொழுதல் தொட்டில் போன்று க
தொ வில் ஆரம்பிக்கும் எந்த சொல் எடுத்துக்கொண்டாலும் அது ஆனந்தத்தின் அடையாளமாகவே இருக்கும்
ஊவில் இந்த சொல்லும் நிலையானது அல்ல என்பதைக் குறிக்கும் ஊர்வன , ஊதி , ஊலை போன்ற சொற்களின் உண்மைப் பொருளை அறிந்தால் புரியும்.

விண் ஏறிச் சென்று விந்தைகள் காட்டிய போதும், அகில அண்டங்கள் யாவையும் கைக்குள் அடக்கி எப்போதும் மனதின் மொழி புரியாமல் உயிரின் வழி தெரியாமல் உடம்பின் நோக்கில் உருத்தெரியாமல் அலைகின்றனர்.

ஆசையையும் கோபத்தையும் அப்பிக்கொண்டு திரிகின்றனர்.
 உழைப்பிற்கு ஊதியம் எனும்போது உழைப்பை தொழிலாக்கி சந்ததிகள் சந்தோசமாய் வாழ்ந்திட வழிவகுப்போம்.
பகட்டையும் பட்டாடையும் விட்டெறிந்து பாசத்தையும் நேசத்தையும் கையிலெடுத்து செய்யும் காரியங்கள் யாவிலும் தர்மத்தை நிலைநிறுத்தி நிம்மதியுடன் வாழ தலைப்படுவோம் 

வீட்டுக்கு ஒரு தொழில் அமைத்து ஆண் பெண் பாரபட்சமின்றி அத்தொழில் புரிவோம். கற்போம் அறிவு பெற , காத்திடவோம் கைத்தொழிலை கவலைகள் நீங்கி மகிழ்வு பெற....


No comments:

Post a Comment