Thursday, 26 December 2019

மருத்துவ குறிப்புகள்


வைத்தீயம்

  1.  உடலில் சூடுபட்டால் உடனே உருளை கிழங்கினை அறிந்து அந்த இடத்தில் வைத்தால் கொப்பளம் கூட உருவாகாது
  2.  புழு விழுந்து உடலில் சொறியும் இடங்களில் தடிப்பு ஏற்பட்டால்  சிறிதளவு தண்ணீரில் உப்பு போட்ட கரைத்து தடிப்பு உள்ள இடம் மற்றும் உடல் முழுவதும் தடவி விட குணம் ஆகும்

  3. மூட்டு வழிக்கு முருங்கை இலையை கொத்தாக போட்டு கொதிக்க வைத்த தண்ணீரை ஆரவைத்து தினம் நீருக்கு பதிலாக குடித்து வர பூரண குணமாகும்

  4. சிறுநீரக கற்கள் கரைய சிறுநெறுஞ்சி செடியை வேருடன் எடுத்து கழுவி மைய அரைத்து 100 மில்லி தினம் வெறும் வயிற்றில் குடித்து வர 12 நாள்களில் சுத்தமாக கரையும்

  5. கர்ப்பபை சம்பந்த பட்ட பிரச்சனைகள் வராமல் இருக்க வந்தபின் தீர மாதும்பழத்தோலை நிழலில் உலர்த்தி அரைத்து வைத்துக்கொண்டு தினமும் காலை மாலை பால் அல்லது சுடுநீரில் கலந்து குடித்து வர பூரண குணமாகும்

  6. காய்சல் தீர பப்பாளி இலையை நரம்புகள் நீக்கி சிறிதளவு சீரகம் மற்றும் மிளகு 8 சேர்த்து நன்கு அரைத்து இருவேளை அருந்தி வர தீரும்
  7. பல்லினை தினம் காலை எழுந்தும் மற்றும் இரவு படுக்கை போவதரற்கு முன்னால் ஆள்காட்டி விரலை கொண்டு துலக்கிட பல்லில் உள்ள கோணல் முணல்கள் , பல்தூக்கி இருத்தல் போன்ற பிரச்சனைகளை தீரும் கம்பி போட தேவையில்லை
  8. சிறுநீரக பிரச்சனைகள் வராமல் இருக்க வாரம் ஒரு முறை எலுமிச்சை சாற்றில் உப்பு சேர்த்து காலை வெறும் வயிற்றில் அருந்த வேண்டும்
  9.  சளி பிடித்தால் எண்ணை தேய்து குளித்தால் சரியாகும் அல்லது குளித்த பின் தேங்காய் எண்ணை உடலில் தடவுவது போல் நல்லெண்ணையை (எள் எண்ணை) உடலில் தேய்த்து வர இரண்டோரு நாளில் சரியாகும்
  10. சளி பிடித்தலின் அறிகுறியான தொண்டை எரிச்சல் தோன்றும் போதே மஞ்சல் கொம்பை எடுத்து நல்லெண்ணை விளக்கில் பிடித்து அதன் புகையை  மூக்கின் வழியாகவோ அல்லது வாயின் வழியாகவோ நுகர சளியே பிடக்காமல் சரியாகும் 
  11. வாயின் உட்புறங்களில் எற்படும் புண்கள் ஒரு நாளில் ஆறிட கல்லுப்பை தூளாக்கி மஞ்சல் சேர்த்து புண்களின் மீது படும் படி இருவேளை படி பல் துலக்கினால் மறுநாள் காணாமல் போகும்
  12. உடலில் ஏற்படும் கட்டிகள் அல்லது இரத்த கட்டுகள் நீக்க பால மரத்து இலையின் பாலை கட்டிகளின் மீது தடவி வர இரண்டு ஒரு நாளில் குணமாகும்
  13. குடல் ஏற்றம் ஏற்பட்டு பேதி போனால் இடது ஆள்காட்டி விரலையும் பெருவிரலையும் துப்பாக்கி போன்று வைத்துக்கொண்டு  இருவிரலும் சந்திக்கும் இடத்தில் வலது கையின் பெருவிரல் ஆள்காட்டி விரல் இரண்டினையும் சேர்த்து அழுத்தினால் வலி அதிகமாக இருக்கும் அப்படியே அழுத்தி பிடித்து படக்கென மூன்று முறை இழுத்து விட்டால் குடல் ஏற்றம் சரியாக போகும்
  14. எண்ணை பசையுள்ள உணவு அல்லது மாமிசம் தின்றதால் பேதி போனால் சிறிது சோம்பு எடுத்த வாயில் போட்டக்கொண்டாடு அதன் சாற்றை உட்கொள்ள உடனே குணமாகும்
  15. நேஞ்சுக்குழியில் உள்ள இறைப்பையில் வலி அல்லது எரிச்சல் இருப்பின் உடனே கொய்ய இலை அல்லது கருவேப்பிலை மென்று சாற்றை விழுங்கினால் சிறிது நேரத்தில் குணமாகும்
  16. சர்க்கரை நோய் என்பது நோய் அல்ல சீரன கோளாறு எனவே சர்க்கரை நோய் உள்ளவர்கள் வெற்றிலை பழக்க வழக்கங்களை மேற்க்கொண்டால் கொண்டால் சார்க்கரை நோய் விரைவில் குணமாகும்
  17. கீழே விழுந்து புண் ஏற்பட்டால் அல்லது ஏதேனும் வெட்டுக்காயம் ஏற்பட்டால் வெட்டுக்காயப் பூண்டு (தாத்தா தாத்தா தலையை வெட்டு செடி) உடன் குடி சாராயம் சிறிதளவு சேர்த்து அரைத்து வைத்தால் ஓரிரு நாள்களில் சரியாகும்

வேர்ச்சொல் ஆய்வு

வேர்ச்சொல் ஆய்வு

தமிழ் சொற்கள் உருவாக்கப்பட்ட காலத்தில் உருவாக்கிய காரணங்கள்
1  காதல்   காதை இழந்தவன் ( ஏதேனும் எண்ணத்தில் அடுத்தவர் சொல்வதை கவனத்தில் ஏற்காத செயல்)
2 காணிக்கார்கள் நில உரிமையார்கள், பூர்வீக குடிக்ள்
3 சர்க்கரை சக்கையாக அரைத்ததில் கிடைத்தது
4 சான்றோர் எடுத்துக்காட்டா வாழ்பவர்கள்
5 சித்ரவதை  சித்தர்களை வதை செய்த நிகழ்வை நினைவூட்டம் காரண பெயர் 
6 சொற்க்கம் சொல் +அகம் வார்த்தைகளில் மட்டும் வெரும் வாய் உலகம்
7 நரகம்   நரன் + அகம்  மனிதர்கள் வாழும் இடம்(வீடு)
8 பள்ளி கூடும் இடம்
9 புராணம்  புறட்டு ஆவணம் (முன் பின் திரித்து எழுதபட்டது)
10 மருத்துவம் உடலை மருத்து போக  செய்யும் செயல் அதாவது வலிதெரியாமல் மருக்கச் (செய்து)  செய்யும் சிகிச்சை 
11 தாயத்து தாயிடம் இருந்து அறுந்து வந்த தொப்புள் கொடியை பத்திரபடுத்த பயன்படும் செப்பு குப்பி (தாய் + அறுத்தது=தாயத்து)
12தாயம் ஒன்று (யாருக்கும் தாய் என்பவள் ஒருத்தர் தான் )
13Teacher தீட்சகர் என்பதன் மறுவல் (ஆசி வழங்குபவர் என்று பொருள் -தீட்சண்யம் )        
14பீங்கான் பீ+கலன் = பீங்கலன் என்பதன் மறுவல் பீங்கான்        
15Quiz குழு குழுக்களாக பிரிந்து கேட்கும் வீனாக்களுக்கு குசுகுசு என தங்களுக்குள் விவாதித்து விடைகூறுவதலை குசு என்பதன் ஆங்கில வடிவம்        

Wednesday, 25 December 2019


யோசிக்க கற்றுக்கொள்
தீரயோசி

மனமே மந்திரம் மனிதன் எந்திரம்



அறிவியல்
அறிவியல் என்பது என்ன என்பதை யாவரும் அறிவோம் ஆனால் அந்த அறிவியல் என்பது வெறும் புறதிறன் பற்றிய விடயம் மட்டுமே. அதாவது வெறும் காட்சி மற்றும் சாட்சி சம்பந்த பட்ட விடயம் மட்டுமே 

கண்ணால் காண்பதும் காதால் கேட்டபடுத்தும் பொய் தீர விசாரிப்பதே மெய் என்றால் உள்ளுணர்வுகளை அறிவியல் ஏற்குமா? ஏதேனும் மறந்து விட்டு வெளியே சென்றால் உள்ளுணர்வு சொல்லுவதை அறிவியல் எற்குமா ?

ஆழ்மனதிற்கு கிடைத்திடும் தகவல்கள் அடுத்தவர்களுக்கு உணர்த்த முடியுமா?. ஏன் மனித உணர்வுகளை முழுமையாக எடுத்துரைக்க எந்த மொழியிலும் வார்த்தையில்லை என்பதை உணர்ந்தவர்கள் நிறைய உண்டு. உணர்வுகளை வெளிபடுத்த வார்த்தைகை உருவாக்க முடியுமா?

அறிவியலை தாண்டிய ஒர் ஆனந்த வெளி உள்ளதை அனைவரும் அறிவோம், அது புறட்டு ஆவணங்களில் சொல்லப்படும் (பூராணங்களில்) சொல்லப்படும் காரண காரியங்களை மேல் எறி காலங்களை கடந்து பவனிவரும் உண்மைகளே.

ஆயிரம் ஆயிரம் வியாதிகளை மனிதன் உருவாக்கி தொற்றா நோய்களையும் அனைவருக்கும் தொற்றுவிக்கும் அறிவியலை நம்பிடும் மனிதன் எந்திரன் தானே. தன்னுடைய  சுற்றுப்புற சூழ்நிலையுடன்  தொடர்பு கொண்டு   இயற்கையோடு வாழ்வதை முற்றிலும் அழித்து விட்டன். மனிதன் சுற்று சூழலை கடந்த உள்ளுனர்வின் மனதின் மந்திரத்தை அறிந்திடும் நாள் என்நாளோ?

காலச்சக்கரம்
    Time machine என்னும் காலச்சக்கரத்தில் பயணம் செய்தல் பற்றி நிறைய கதைகள் கேட்டிருப்போம், ஆம் காலச்சக்கரம் என்ற கருவி ஒன்று உள்ளதா ? அதன் மூலம் இறந்த காலம் மற்றும் எதிர்காலங்களுக்க செல்ல முடியுமா? சாத்தியமா என்றால்.......

 வானத்தில் அன்னார்ந்து பார்க்கும் நட்சத்திரங்களின் தற்போதைய அமைப்பை நாம் (A) பார்ப்பது இல்லை அவை பூமியிலிருந்து எவ்வளவு ஒளியாண்டு தொலைவில் உள்ளதோ அவ்வளவு அண்டிற்கு முற்பட்ட ஒரு காட்சியையே நாம் பார்த்து கொண்டுள்ளோம்.  அதே சமயத்தில் ஒரு 10 ஒளியாண்டுகள் தொலைவு முன்னுள்ள ஒரு கோளில் இருந்து மற்றோருவர் (B) பார்க்கிறார் எனக்கொண்டால்  அவர்பார்க்கும் காட்சி வேறாகவும் நாம் காணும் காட்சி வேறாவும் தான் இருக்கும், இந்த  கருத்துப்படி படி பார்த்தால் சாத்தியம். இருப்பினும் B பார்த்த காட்சியை 10 ஒளியாண்டுகள் கழித்து நாம் பார்கலாம் அதில் மாற்றம் எற்படாது ஆகா காட்சிகளை காணலாமே தவிர சாட்சிகளை மாற்ற இயலாது.

ஆனால் நீண்ட காலம் தொட்டோ இந்த கால எந்திரத்தின் கதைகள் நம்மிடம் உள்ளதே, ஒருவேளை நமது புறட்டு ஆவணங்களில் இது பற்றி ஏதேனும் உள்ளதா என்றால்  எந்த கடவுளும் யாம் அறிந்து வரை காலத்தை கடந்து சென்றதாக கதைகள் இல்லை. அப்புறம் எப்படி இந்த கால எந்திரம் பற்றி கருத்துக்கள் மட்டும் நம்மை தொடரந்து வருகின்றது. ஒருவேளை இது மேற்கத்தியி சிந்தனையா என்றால் அவர்கள் மட்டும் யார் அவர்களும் பல்வேறு காலகட்டத்தில் இங்கிருந்து சென்றவர்கள் தானே..

என் இந்த வழவழ குழை குழை என்று. நேரடியாகவே கேள்வி எழுப்புகிறேன் தாங்கள் யாரேனும் கால எந்திரத்தில் பயணம் செய்தது உண்டா? என்றால் கூட கேள்விகளை தாங்கள் திரும்ப என்பக்கமே திருப்பலாம். திருப்பினாலும் திருப்பவில்லை என்றாலும் நான் மட்டும அல்ல, தாங்கள் அனைவரும் கால எந்திரத்தில் எறி கால சக்கரத்தை சுற்றியுள்ளிர்கள்