Monday, 22 June 2020

முக்தியின் இரகசியம்

முக்தியின் இரகசியம்

         சித்தர் என்று இன்று சொல்லும் அளவிற்கு யாரும்  வரவில்லை முக்தி பெற்றார் என்று சொல்லிட இன்றளவில் யாரும் இல்லை இதற்கான காரணங்கள் என்ன என்பதை அறிந்திட  முற்பட்ட போது கிட்டியவை இங்கு விவாதிக்க உள்ளோம்

 முக்தி என்பது அறிவின் முதிர்ச்சியோ அல்லது அறிவியலின் முதிர்ச்சியோ அல்ல அது முழுக்க முழுக்க ஆன்மாவின முதிர்ச்சி திருமூலரின் திருமந்திரம் கூறும்  உயிர் வளர்க்கும் மந்திரம்

 குழந்தை உருவாக உதவும் விந்தணுக்களை  பிறப்பு உறுப்பு வழியாக வெளியேற்றுவதை தவிர்த்து குண்டலின யோகசனத்தின் மூலம்  முதுகெலும்பு வழியாகா சிரம் ஏற்றி மூளையில் சொட்டிட செய்தால் மூளையின் கட்டுப்பட்டில் உள்ள உடலும் மனமும் சக்தி பெற்றும் இந்த சக்தியை பெற்றவர்கள் தான் சித்தர்கள் என்பதை அனைவரும் ஆறிவர்
 இத்தகைய சித்தர் உருவாகும் வாய்ப்பு இந்தியாவில் அதிகம் என்பதை அறிந்து தான் என்னவோ  இந்தியர்களை மலடாக மாற்றிட ஆயிரம் ஆயிரம் செயல்கள் நடைபெறுகின்றன. இன்னும் சொல்லப்போனால் இன்று மருத்துவமனை செல்லாது ஒரு குழந்தை பெற்றெடுத்தால் அது கொலை குற்றத்திற்கு ஒப்பாக கருதும் அளவிற்கு சட்டங்கள் உள்ளது. இயற்கையில் பிறப்பு என்பது அனைத்து உயிரினதிற்கும்  பொது என்ற நிலை மாறி இந்தியாவில் இன்று சட்டம் என்ற நிலை ஏற்பட்டுள்ளது

 உண்ணும் உணவு முதல் அனைத்தும் மக்களை மலடாக்கும். விதைக்கும் விதைகள் வழி கிடைத்த விதைகள் முளைக்காது எல்லாம் ஹைப்ரிட் குழந்தைகள் உடலால் வளர்ச்சி அடைய இயலாத கல்வி முறை, சராசரி அறிவை எட்ட இயாலாத தரம் , களிமன் ஒடுகளால் வேய்ந்து உருவாக்கப்பட்ட மலைகளாய் யாவும் சித்தரிப்புகளாய் காட்டி நமது சித்த இரகசியங்களை அழித்திடும்  செயல்கள்.

 பகட்டிற்கும்  வெளி வேசத்திற்கும் மங்கிடும் மனிதர்கள் மாண்பினை எதிர்திட துணியவும் செய்கின்றனர்
 

முதிர்வு கால பயணம்

முதிர்வு கால பயணம்
 யாரும் எதிர்பார்த்திடாத முதிர்வு கால பயணம் உங்களையும் அறியாது நாமும் நமது குழந்தைகளும் சென்று கொண்டு இருக்கிறோம். யோசிக்க முடியாத கோணம். 10 வயதினை கடந்த குழந்தைகள் பலர் இடம் ஆய்த்திலும் மறந்து போன மருத்துவம் என்ற நூலில் கருந்துருக்களை ஆய்து பார்த்ததில் கண்டறிந்த அதிசயம்.

  வயதுகளை தாண்டிய உடல் முதிர்ச்சி, ஆண் பெண் என்ற பாகுபாடு இன்றி இன்றைய பொழுது போக்கு அம்சங்கள் நமக்கு அளித்துள்ள நஞ்சு , பிஞ்சுகளை வெதும்ப செநய்திடும் நஞ்சு.

 தொலைக்காட்சி பெட்டி பற்றிதான் குறிப்பிடுகின்றேன்.   தொலைகாட்சியில் தொலைந்து போகும் குழந்தைகளை சற்று கவனியுங்கள் தெரியும்  ஆம்  'பொழுது போக்கு ' என்ற தமிழ் சொல் கூட அதைத்தான் குறிப்பிடுகின்றது காலங்களை விரைவாக செல்லச்செய்வது. ஆம் தொலைகாட்சி, மற்றும் செல்லிட பேசிகளில் தொலைந்து போகும் குழந்தைகளின் உடல்கள் விரைவாக வளர்கின்றன, முக அமைப்பு முதல் சிந்தனை வரை எல்லாம் வயதினை தாண்டி வளர்ச்சி

 ஆறாவது படிக்கும் பிள்ளைகள் எட்டாவது அல்லது பத்தாம் வகுப்பு படிக்கும் பிள்ளைகள் போன்றும் எட்டாவது பிள்ளைகள் பத்தாம் வகுப்பு பிள்ளைகள் போலவும்  உருவ அமைப்பில் மாறுபடுவதை காணலாம். ஏன் பெண் பிள்ளைகளில் பூப்பெய்தும் வயது கூட குறைவது கண்டு வருத்தப்பட்டது உண்டு, சிறு வயதிலேயே பூப்பெய்தும் பெண்பிள்ளைகள் அதிகம்.

 மறந்து போன மருத்துவம் என்ற நாலில் ஆசிரியர் சொல்லுவார் தொலைகாட்சி பார்க்கும் பெரியவர்களுக்கும் விரைவிலேயே முட்டு வழி எற்படும் என்று, ஆம்  80 அல்லது 90 வயதுளிலும் வந்திடா மூட்டு வழி இன்று முப்பது வயதினை கடக்கும் போதே வருகிறது. இதற்க்கு காரணம் என்ன?  என்பதை தெளிவாக விளக்கி இருப்பார்

 எழுத்துக்கள் மனிதனை சிந்திக்க வைத்தாலும் காட்சிகள் மனிதனை வாழவைக்கின்றன ஆம் காட்சியாக ஒரு கதைப்பார்த்தாலும் அது கதை கருத்தின் கால அளவு உடல் உறுப்புகளை  முதிர்ச்சி அடைய செய்கின்றது.  அதனால் தான் இத்தனை மாற்றமும், உணவும் அவசர உணவு, உடையும் உடல் ஓட்டியவை. காணும் காட்சிகளும் கால முதிர்ச்சியை தருபவை
 இவை யாவும் நம்மை அறியாது நம்மை எதிர்கால பயணித்தில் நம்மை பறக்க செய்கின்ற...

 நாம் யாவரும் நம்மை காட்டிலும் 10 முதல் 20 வது வயது வரை உடலாலும் உணர்வாலும் முதிர்ச்சி அடைந்து உள்ளோம் .  என்றும் இளமையாய் பலநூறு ஆண்டுகள் வழந்த சித்தர்கள் பூமியில்  இளமையிலேயே முதுமை அடைந்து வாழ்கிறோம். இதை உணர்வார் உண்டோ

சிந்தனைகள்

சிந்தனைகள்
 சிலருக்கு சிக்குவது இல்லையோ அல்லது
 சிந்தையில் ஏற்றிக்கொள்வது இல்லையோ
 சிலையாய் நிற்கின்றனர் -சிலையின்
 சிற்பி தீர யோசித்த போதும்  சிலைகள் ஏனோ
 சிந்திப்பதில்லை அடுத்தவரை சிந்திக்க வைக்கின்றன
 சிந்தித்து சிந்தித்து ஆய்து ஆய்து கொடுத்திட
 சிறிதும் சிந்திக்காத மாணவர் இனம்
 சிந்தனையில் தவறோ சிந்திப்பதே  தவறோ
 சிரம் தாழ்ந்து வணங்குகின்றேன் இறைவா
 சிந்திக்கும் ஆற்றலை அனைவருக்கும் அருள்வாயாக
 

முதல் மனிதன்


முதல் மனிதன் 

   தமிழர்  சிந்தனை பேரவை  நண்பரிடம்  ஒருமுறை நான் கேட்ட கேள்வி ஏனோ இணையத்தில் எற்றப்பட்டு ஓரிரு நாட்களில் நீக்கப்பட்ட முதல்  மனிதன் பற்றிய விவாதம் .....

      வடிவேல் பாணியில் சொன்னால் அடுத்தவனுக்கு வந்தால் தக்காளி சட்டினி அவரவர்களுக்க வந்தால் இரத்தம்
தாங்கள் செய்வது இயற்கை நிகழ்வு , அடுத்தவர் செய்வது திட்டமிட்ட சதி......
 எப்படியோ தங்கள் சிந்தனையும் இயற்கை நிகழ்வுகளும் பொருந்தும் வரை கதை சொல்லுங்கள் தாங்கள் சொல்லும் கதைகள் வரலாற்றை மிட்டெடுக்க புரட்டு ஆவணங்களுக்கு (புராணாங்கள்) எதிராக இருந்தது வரவேற்க தக்கது என்ற போதும் அடுத்தவரை வில்லானாகவும் தங்களை கதை நாயகனாகவும் நினைப்பது அனைவருக்கும்  உரியது அதைதான் நடுநிலையை தாண்டி தாங்களும் செய்கின்றீர்.
தங்கள கருத்துபடி பார்த்தால்
  1. இலங்கையில் இருந்து தமிழர்கள் இந்தியா வந்த வரலாற்றுக்கு முன் இந்தியாவில் மனிதர்கள்  யாரும் இல்லையா?
  2. இந்தியாவின் ஆதி குடிகளின் மொழி தமிழ் மொழி என்று தங்களால் உறுதி கூறு முடியுமா ?
  3. இங்கு இருந்து அழிந்து கொண்டுள்ள காணிகாரர் மொழிகள் , நாகர்கள் பேசிய மொழிகளை பற்றி அறிவீர்களா?
  4.  தமிழ் மொழியின் வளர்ச்சிக்காக அழிக்கப்பட்ட (அ) அழிந்து போன மொழிகள் எத்தனை எத்தனை தங்களுக்கு தெரியாதா?
  5. தாங்கள் கூறும் வரலாற்றுக்கு முன் இந்தியாவில் வாழ்ந்த இயற்கையோடு இணைந்த வாழ்வை வாழ்ந்து வந்த சிவனின்  வம்சா வழிகளை அழிந்தது யார்?
  6. சிவன் வழியில் இயற்கையோடு வாழ்பவர்கள் தான் சித்தர்கள்.. சித்தர்களின் வாழ்வில்  விவசாயம் எப்போதும் செய்தது இல்லை. விவசாயத்தை ஊக்குவித்ததும் இல்லை 
  7. விவசாயம் செய்வதாற்கா நடைபெற்ற போர்கள் தானே சூரசம்காரம், மகாபாரதம் போன்றவை என்பதை ஒத்துக்கொள்ளும் தாங்கள் அந்த போருகளுக்கு மூல காரணமே வந்தேரி தமிழர்கள் தான் என்பதை ஏற்றுக்கொள்வீரா?
  8. காலச்சக்ரத்தின் சுழற்யில் மகாபாரதம் ,இராமயணம், என பின் நோக்கி சென்ற தாங்கள் அதனையும் தாண்டி சூரசம்காரம் மற்றும் அதற்கு முந்தைய காலத்திலும் பயணம் செய்யுங்கள் அப்போது தெரியும் இன்றைய குமரி முனையில் கொள்ள பட்ட அப்பாவி உயிர்கள் எந்தனை எத்தனை ....  
  9. யானைக்கு ஒரு காலம் வந்தால் பூனைக்கும் ஒருகாலம் வரும் என்பது போல் அன்றைய இந்திய மண்ணில்  வாழ்தவர்களை இயற்கையோடு பிணைந்து வாழ்ந்த வாழ்வை அழித்தவர் யார்... அவர்களை துரத்தியவர் யார்...
  10. இந்திய மண் யாருக்கு சொந்தம். சூரசம்காரத்தில் வெற்றி பெற்றதால்  முருகனுக்கு , ராவணீயத்ததில் வெற்றி பெற்றதால் இராவணனுக்கு ,மாகபார போரில் வெற்றி பெற்றதால் தான்  பாண்டவர்களுக்கு , இதில் வந்தேரீகள்  யார் ? பூர்வீக குடி யார், யார் .....
கால சக்கரத்தில் எதுவும் சாத்தியம் ஒவ்வொரு செயலுக்கும் ஒவ்வொருவரும் பதில் சொல்லியாக வேண்டும் இன்னும் கொஞ்சம் முயன்று பாருக்கங்கள் உண்மைகள் விளங்கும்.


     எல்லாம் அறிவியல் ஆராய்ச்சி என்று ஆயிரம் ஆயிரம் வளர்ச்சிகள் அதிலும் மருத்துவம் முதல் தொழிற்சாலைகள் வரை நாட்டிற்கு நாடு ஒரு சட்டம் என்னவென்று சொல்வது.
    ''தாயை பழித்தாலும் தண்ணீரை பழிக்காதே'' என்ற பழமொழி உள்ள இந்த நாட்டில் தண்ணீரை தூய்மையாக வைத்துக்கொள்ள ஒருத்தரும் இல்லை ஆறுகளை கடவுளாக வழிப்பட்ட காலம் போய் தற்போது கழிவுகளை கொட்டும் குப்பை தொட்டிகாளாக மாற்றி விட்டது. தனிபர் ஒழுக்கமும், அரசின் கொள்கையும் வெரும் கண்துடைப்பாக உள்ளது. விசங்களை கக்கிடும் தொழிற்சாலைகளும் ஆற்றுநீரை கெடுக்கும் தொழிற்சாலைகளுக்கும முன்னுரிமையுடன் வழிவிடப்படுகின்றன. பிறநாடுகளின் அனுமதி வழங்காத தொழிற்சாலைகளுக்கு நமது நாட்டில் முன்னுரிமை அதிகம் என்ன சொல்வது யாரை கேட்பது 
   உலக மனிதன தோன்றியது தமிழகம் என்பது எவ்வளவு உண்மை என்பதை இதன் மூலம் தான் அறிய முடிகின்றது. ஆம் வீட்டில் உள்ள பழைய சோறு முதல் ஆபாத்தான பணிகள் யாவும் அன்னை தந்தையர் இடம்  விட்டு விடுவோம் அது போல தீமை தரும் தொழில்கள் யாவும் இந்திய நாட்டில் செய்கின்ற பிற நாடுகள் .