Monday, 22 June 2020

முதல் மனிதன்


முதல் மனிதன் 

   தமிழர்  சிந்தனை பேரவை  நண்பரிடம்  ஒருமுறை நான் கேட்ட கேள்வி ஏனோ இணையத்தில் எற்றப்பட்டு ஓரிரு நாட்களில் நீக்கப்பட்ட முதல்  மனிதன் பற்றிய விவாதம் .....

      வடிவேல் பாணியில் சொன்னால் அடுத்தவனுக்கு வந்தால் தக்காளி சட்டினி அவரவர்களுக்க வந்தால் இரத்தம்
தாங்கள் செய்வது இயற்கை நிகழ்வு , அடுத்தவர் செய்வது திட்டமிட்ட சதி......
 எப்படியோ தங்கள் சிந்தனையும் இயற்கை நிகழ்வுகளும் பொருந்தும் வரை கதை சொல்லுங்கள் தாங்கள் சொல்லும் கதைகள் வரலாற்றை மிட்டெடுக்க புரட்டு ஆவணங்களுக்கு (புராணாங்கள்) எதிராக இருந்தது வரவேற்க தக்கது என்ற போதும் அடுத்தவரை வில்லானாகவும் தங்களை கதை நாயகனாகவும் நினைப்பது அனைவருக்கும்  உரியது அதைதான் நடுநிலையை தாண்டி தாங்களும் செய்கின்றீர்.
தங்கள கருத்துபடி பார்த்தால்
  1. இலங்கையில் இருந்து தமிழர்கள் இந்தியா வந்த வரலாற்றுக்கு முன் இந்தியாவில் மனிதர்கள்  யாரும் இல்லையா?
  2. இந்தியாவின் ஆதி குடிகளின் மொழி தமிழ் மொழி என்று தங்களால் உறுதி கூறு முடியுமா ?
  3. இங்கு இருந்து அழிந்து கொண்டுள்ள காணிகாரர் மொழிகள் , நாகர்கள் பேசிய மொழிகளை பற்றி அறிவீர்களா?
  4.  தமிழ் மொழியின் வளர்ச்சிக்காக அழிக்கப்பட்ட (அ) அழிந்து போன மொழிகள் எத்தனை எத்தனை தங்களுக்கு தெரியாதா?
  5. தாங்கள் கூறும் வரலாற்றுக்கு முன் இந்தியாவில் வாழ்ந்த இயற்கையோடு இணைந்த வாழ்வை வாழ்ந்து வந்த சிவனின்  வம்சா வழிகளை அழிந்தது யார்?
  6. சிவன் வழியில் இயற்கையோடு வாழ்பவர்கள் தான் சித்தர்கள்.. சித்தர்களின் வாழ்வில்  விவசாயம் எப்போதும் செய்தது இல்லை. விவசாயத்தை ஊக்குவித்ததும் இல்லை 
  7. விவசாயம் செய்வதாற்கா நடைபெற்ற போர்கள் தானே சூரசம்காரம், மகாபாரதம் போன்றவை என்பதை ஒத்துக்கொள்ளும் தாங்கள் அந்த போருகளுக்கு மூல காரணமே வந்தேரி தமிழர்கள் தான் என்பதை ஏற்றுக்கொள்வீரா?
  8. காலச்சக்ரத்தின் சுழற்யில் மகாபாரதம் ,இராமயணம், என பின் நோக்கி சென்ற தாங்கள் அதனையும் தாண்டி சூரசம்காரம் மற்றும் அதற்கு முந்தைய காலத்திலும் பயணம் செய்யுங்கள் அப்போது தெரியும் இன்றைய குமரி முனையில் கொள்ள பட்ட அப்பாவி உயிர்கள் எந்தனை எத்தனை ....  
  9. யானைக்கு ஒரு காலம் வந்தால் பூனைக்கும் ஒருகாலம் வரும் என்பது போல் அன்றைய இந்திய மண்ணில்  வாழ்தவர்களை இயற்கையோடு பிணைந்து வாழ்ந்த வாழ்வை அழித்தவர் யார்... அவர்களை துரத்தியவர் யார்...
  10. இந்திய மண் யாருக்கு சொந்தம். சூரசம்காரத்தில் வெற்றி பெற்றதால்  முருகனுக்கு , ராவணீயத்ததில் வெற்றி பெற்றதால் இராவணனுக்கு ,மாகபார போரில் வெற்றி பெற்றதால் தான்  பாண்டவர்களுக்கு , இதில் வந்தேரீகள்  யார் ? பூர்வீக குடி யார், யார் .....
கால சக்கரத்தில் எதுவும் சாத்தியம் ஒவ்வொரு செயலுக்கும் ஒவ்வொருவரும் பதில் சொல்லியாக வேண்டும் இன்னும் கொஞ்சம் முயன்று பாருக்கங்கள் உண்மைகள் விளங்கும்.


     எல்லாம் அறிவியல் ஆராய்ச்சி என்று ஆயிரம் ஆயிரம் வளர்ச்சிகள் அதிலும் மருத்துவம் முதல் தொழிற்சாலைகள் வரை நாட்டிற்கு நாடு ஒரு சட்டம் என்னவென்று சொல்வது.
    ''தாயை பழித்தாலும் தண்ணீரை பழிக்காதே'' என்ற பழமொழி உள்ள இந்த நாட்டில் தண்ணீரை தூய்மையாக வைத்துக்கொள்ள ஒருத்தரும் இல்லை ஆறுகளை கடவுளாக வழிப்பட்ட காலம் போய் தற்போது கழிவுகளை கொட்டும் குப்பை தொட்டிகாளாக மாற்றி விட்டது. தனிபர் ஒழுக்கமும், அரசின் கொள்கையும் வெரும் கண்துடைப்பாக உள்ளது. விசங்களை கக்கிடும் தொழிற்சாலைகளும் ஆற்றுநீரை கெடுக்கும் தொழிற்சாலைகளுக்கும முன்னுரிமையுடன் வழிவிடப்படுகின்றன. பிறநாடுகளின் அனுமதி வழங்காத தொழிற்சாலைகளுக்கு நமது நாட்டில் முன்னுரிமை அதிகம் என்ன சொல்வது யாரை கேட்பது 
   உலக மனிதன தோன்றியது தமிழகம் என்பது எவ்வளவு உண்மை என்பதை இதன் மூலம் தான் அறிய முடிகின்றது. ஆம் வீட்டில் உள்ள பழைய சோறு முதல் ஆபாத்தான பணிகள் யாவும் அன்னை தந்தையர் இடம்  விட்டு விடுவோம் அது போல தீமை தரும் தொழில்கள் யாவும் இந்திய நாட்டில் செய்கின்ற பிற நாடுகள் .

No comments:

Post a Comment